யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதிகளில் மாவீரர் தின சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.
குறிப்பாக யாழ்.மத்திய பேருந்து நிலையப் பகுதிகளில் அதிகளவிலான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
“கொண்ட இலட்சியம் குன்றிடா எங்கள் வீர மறவர்களின் மாவீரர் நாள்” என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டிகளே ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டிகளுக்கு தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை உரிமை கோரியுள்ளது.
