வாலி, குஷி போன்ற வெற்றிப் படங்களை இயக்கி பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய எஸ்.ஜே.சூர்யா தற்போது பல படங்களில் வில்லன் வேடங்களில் நடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் வந்தவண்ணம் உள்ளன.
அண்மையில் வெளியான மாநாடு, டான் படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
தற்போது எஸ்.ஜே.சூர்யாவின் கைவசம் ‘பொம்மை’, ‘மார்க் ஆண்டனி’ மற்றும் ‘ஆர்சி 15’ படங்கள் உள்ளன. தொடர்ந்து இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் ‘வதந்தி’ எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார்.
புஷ்கர் – காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.

வதந்தி படம் குறித்தும் பல விடயங்களை எஸ்.ஜே.சூர்யா பகிர்ந்துள்ளார். “போய் சேர வேண்டிய இடம் நூறு என்றால் நான் 15 கிலோ மீற்றர் மட்டுமே கடந்திருக்கிறேன். எனக்கு ஆஸ்கர் விருது வாங்குவது தேசிய விருது வாங்குவது இவைகளில் விருப்பம் இல்லை.
எஸ்.ஜே.சூர்யா நடித்தால் அதை உடனே பார்க்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்க வேண்டும். அந்த அன்பை மக்களிடம் இருந்து வாங்க வேண்டும்” என்பதே ஆசை எனத் தெரிவித்துள்ளார்.
