தமிழர் தாயகப் பகுதியில் மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக இன்று (27) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அவ்வகையில், முதல் மாவீரர்களான சங்கர் மற்றும் பண்டிதர் ஆகிய இல்லங்களில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவீரர் பண்டிதரின் தாயாரல் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. இவ் அஞ்சலி நிகழ்வு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
