அமெரிக்கா ஒரேகான் மாகாணத்தைச் சேர்ந்த பிலிப் – ரேச்சல் தம்பதியினருக்கு செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
இதில் உள்ள அதிசயம், இந்த குழந்தைகள் 30 வருடங்களுக்கு முன்பு அதாவது, 1992ம் ஆண்டில் கிரையோபிரிசர்வ் முறையில் உறைய வைக்கப்பட்ட கரு முட்டை மூலம் பிறந்துள்ளன.
1992ஆம் ஆண்டில் இருந்து திரவ நைட்ரஜனில் பூஜ்ஜியத்திற்குக் கீழே 200 டிகிரி மைனஸ் வெப்ப நிலையில் உறைய வைக்கப்பட்ட கரு முட்டை குறித்த தம்பதிகளுக்கு தானமாக கிடைக்கப் பெற்றது.
குறித்த கருமுட்டையைப் பயன்படுத்தி செயற்கை கரூவூட்டல் மூலம் உருவான இரட்டை குழந்தைகள் தற்போது பிறந்துள்ளது. மருத்துவ உலகத்தில் இது புதிய சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு 27 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்டிருந்த கருமுட்டையிலிருந்து கடந்த 2020ம் ஆண்டு பிறந்த மோலி கிப்சனின் சாதனையை இந்த குழந்தைகள் தற்போது முறியடித்துள்ளன.
