மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி அவரது நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட உள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அ.தி.மு.க கட்சியினர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறிப்பிடப் பட்டிருப்பதாவது,
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6இம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 5ஆம் திகதி காலை 10 மணியளவில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இடம்பெறவுள்ளது.
அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி மலர்கள் தூவி, அஞ்சலி செலுத்துவார். தொடர்ந்து கட்சியின் தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ளனர் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.