சீனாவில் மீண்டும் கொரோனாத் தொற்று அதிகரித்து வருகின்றது. நேற்று (26) தொடர்ச்சியாக 3 ஆவது நாளாக 30000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 35,909 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது சீனாவின் கொரோனா பாதிப்பில் மிக அதிகமான அளவாகும்.
