தமிழர் தாயகப் பகுதிகளில் மாவீரர்களை இன்று (27) மாலை அனுஷ்டிப்பதற்கான அணைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவீரர்களை நினைவேந்த மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் இணைந்து ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
அவ்வகையில், தமிழர் தாயகத்தில் உள்ள துயிலும் இல்லங்கள் துப்பரவு செய்யப்பட்டு சிவப்பு, பச்சைக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.
இன்று மாலை 6.05 மணியளவில் ஆலயங்களில் மணி ஓசை எழுப்பப்பட்டு துயிலும் இல்லங்கள், பொது இடங்கள்,வீடுகளில் ஈகைச் சுடர் ஏற்றப்படும்.
