தமிழர் தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் இன்று (27) அனுஷ்டிக்கப் பட்டது.
அவ்வகையில், கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினத்தை அனுஷ்டித்தனர்.
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் மஞ்சள், சிவப்பு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, தாயக பாடல்கள் ஒளிக்க விடப்பட்டு உணர்வெழுச்சியுடன் மாவீரர்தினம் நினைவு கூரப்பட்டது.
மணி ஓசை எழுப்பப்பட்டு 6.05 மணிக்கு பிரதான பொதுச்சுடரினை மூத்த போராளியும், மாவீரரின் தந்தையுமான பசீர் காக்கா ஏற்றி வைத்தார்.
