கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்வேலிப் பகுதியில் 100 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
மாங்குளத்தில் இருந்து நீர்வேலிக்கு கஞ்சா வாங்க வந்த இளைஞனை பின் தொடர்ந்து வந்த விசேட அதிரடிப் படையினராலேயே குறித்த இளைஞன் நீர்வேலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவலின் அடிப்படையிலேயே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞன் விசேட அதிரடிப்படையினரால் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க் கொண்டு வருகின்றனர்.
