60 வயதுடைய தந்தையை 34 வயதுடைய மகன் மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்த அதிர்ச்சியான சம்பவம் நேற்று (26) பதுளையில் இடம்பெற்றது.
பதுளை – வெவெஸ்தைப் பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தந்தையை கொலை செய்த மகன் வாய் பேச முடியாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் கொலை தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
