இந்தியா – உத்தரபிரதேச மாநிலம் லோஹமாய் கிராமத்தைச் சேர்ந்த ராம்கிஷன் மற்றும் ரவீனா இருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.
கணவர் குதிரையில் ஊர்வலமாக வர வேண்டும் என்று ரவீனா விரும்பினார். ஆனால் ராம் கிஷன் குதிரையில் ஊர்வலமாக செல்வதை மற்றைய சாதியினர் விரும்பவில்லை.
இதனால் மணமகனின் குதிரை ஊர்வலத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து மணப்பெண் குடும்பத்தினரால், சம்பல் மாவட்ட பொலிஸிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், மாவட்ட பொலிஸ் நிலையத்தால் குறித்த திருமணத்திற்கு அதிகளவான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
பொலிஸாரின் பாதுகாப்புடன் மணமகனின் குதிரை ஊர்வலம் நடந்தது.