தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 68 வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (26) யாசகர் ஒருவர் இனிப்புப் பண்டங்கள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
நல்லைக் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக யாசகம் பெறும் ஒருவரே தனது சொந்தச் செலவில் இனிப்புப் பண்டங்களை வாங்கி மக்களுக்கு வழங்கியுள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வுகள் தமிழர் பகுதிகளில் நேற்று (26) முன்னெடுக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
