கெமரூன் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவினால் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் 20 மீற்றர் உயரமுள்ள அணைகட்டுப் பகுதியின் அடிவாரத்தில் உள்ள மைதானத்தில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது மண்சரிவு ஏற்பட்டு மண்சுவர் அவர்கள் மேல் இடிந்து விழுந்தது. இதில் 14 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டு இராணுவத்தினரின் உதவியுடன் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
