உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான அறிவித்தலை இவ்வருட இறுதிக்குள் தேர்தல் ஆணைக்குழு வெளியிடும் என்று எல்லை நிரணய ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணயக் குழுவினால் காலம் தாழ்த்த முடியாது. அடுத்த வருடம் பங்குனி மாதத்திற்கு முன்னர் புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.
ஆகையால், மாசி மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிட வேண்டியது கட்டாயம் என அவர் மேலும் தெரிவித்தார்.
