முன்பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவரை காட்டுமிராண்டித் தனமாக ஆசிரியர் ஒருவர் தாக்கியுள்ளார்.
முன்பள்ளியில் குறித்த ஆசிரியர் மாணவர்களுக்கு கோலாட்டம் பழக்கியுள்ளார். இதன் போது, குறித்த மாணவன் தவறு இழைத்ததால் ஆசிரியர் தாக்கியுள்ளார்.
இதனால், காயமடைந்த மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இந்நிலையில், 36 வயதுடைய குறித்த ஆசிரியர் கோப்பாய் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
