கனடாவிற்கு கப்பல் மூலம் சென்று பிலிப்பைன்ஸ் கடற்பரப்பில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் சனிரைசர் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சாவகச்சேரி இளைஞனின் உடலை நாட்டுக்கு கொண்டு வருவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
சாவகச்சேரியைச் சேர்ந்த 37 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான கிரிதரன் வியட்நாமில் உயிரை மாய்த்துள்ள நிலையில், அவரின் உடலை கொண்டு வருவதற்கு உதவி செய்யும் படி இறந்தவரின் மனைவியும், பிள்ளைகளும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், இறந்தவரின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு 30 லட்சம் ரூபாவை வியட்நாம் அரசு கோருவதாகவும், அந்நிதியை விடுவிப்பதற்கு தமக்கு அனுமதி இல்லை எனவும், இறந்தவரின் உடலை வியட்நாமிலேயே அடக்கம் செய்வதற்கு அவரது குடும்பத்தினருடன் பேசி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
