பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு வழக்குதாக்கல் செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவரான ந.திவாகரன் மற்றும் செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோரே அனைத்து வழக்குகளிலும் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிகள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆஜாராகியமை குறிப்பிடத்தக்கது.
