உயிர் கொல்லியான ஹெரோயின் போதைப் பொருளைப் ஊசி மூலம் பயன்படுத்திய 15 வயது சிறுவன் ஒருவர் மூளை மற்றும் இதயத்தில் கிருமி தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ள அதிர்ச்சியான சம்பவம் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த சிறுவனே உயிரிழந்துள்ளார்.
கடும் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டபோதும் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
யாழ் மாவட்ட நீதவான் சிறுவனின் சடலத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணைகளில் சிறுவன் ஹேரோயின் போதைப் பொருளை ஊசி மூலம் பாவித்தமையே உயிரிழப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
