நடிகை மீனா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என இந்திய மொழிகளில் நடித்து பிரபலமானவர்.
தற்போது அதிகமாக அம்மா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை மீனாவின் கணவர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந் நிலையில், நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. மீனாவிற்கு விருப்பம் இல்லை என்றாலும் பெற்றோர்களின் கட்டாயத்தால் மறுமணத்திற்கு அவர் ஒப்புக் கொண்டதாகவும் குடும்ப நண்பரை திருமணம் செய்யப்போவதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் மீனா தரப்பில் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என மறுத்துள்ளதுடன் இது வதந்தி என்று தெரிவித்துள்ளனர்.
