இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்தியத்தின் எழு சாலையைச் சேர்ந்த ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை மேற்க்கொள்ள உள்ளதாக இ.போ.ச தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இ.போ.சபையின் ஊழியர் ஒருவர் அண்மையில் தாக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தாக்கியவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்விடயத்தை கண்டித்தும், குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுமே நேற்று யாழ்.சாலை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
குறித்த கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்காத பட்சத்திலேயே வடமாகாண ரீதியாக இன்று (29) பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள உள்ளதாக இ.போ.சபையின் வடமாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் உள்நுழையாத வகையில் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பேருந்துகள் பயணிகளை வீதிகளிலே இறக்கியமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.
