வலி.மேற்கு பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட சங்கானையில் இரண்டு வீதிகளைப் புனரமைத்து தருமாறு கோரிக்கை வைத்து பொதுமக்கள் வீதி மறியல் போராட்டத்தில் இன்று (29) ஈடுபட்டனர்.
காரைநகருக்குச் செல்லுகின்ற குறித்த இரண்டு வீதிகளும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணங்களை மேற்க்கொள்வது மிகவும் சிரமமாக உள்ளதாக தெரிவித்தே மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் வீதி மறியல் போராட்டத்தில் வலி.மேற்கு பிரதேசசபை உப தவிசாளர், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் இறுதியில் சங்கானை பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப் பட்டது.
