கனடாவிற்கு அனுப்புவதாக தெரிவித்து இரு இளைஞர்களிடம் பணம் வாங்கிய பெண் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பண்டத்தரிப்பு – வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் இரண்டு இளைஞர்களிடம் முறையே 55 இலட்சம், 44 இலட்சத்து 35 ஆயிரம் பணத்தை வாங்கியுள்ளார்.
நீண்ட நாட்கள் ஆகியும் பணம் வாங்கியவர்களை கனடா நாட்டுக்கு அனுப்பவில்லை என்றும், பணத்தை மீள தரும்படி கேட்டாலும் தருகிறார் இல்லை எனவும் குறித்த முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
