விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு செய்வதற்காக பல நாடுகளுடன் இணைந்த கூட்டுத் திட்டத்தின்படி ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது.
ரஷ்யாவிற்கு போட்டியாக புவி சுற்றுப் பாதையில் விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகளில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக கடந்த ஜீன் மாதம் ஷென்சோ-14 குழுவை சீனா விண்வெளிக்கு அனுப்பியிருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதள மையத்தில் இருந்து ஷென்சோ-15 விண்கலத்துடன் இணைந்த ஒய்15 கேரியர் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மூன்று வீரர்களை சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பியது.
