“சீனா இலங்கையின் நட்பு நாடு இல்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கே சீனா நண்பராக இருக்க முடியும்” மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
இன்று (30) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
“சீனா இலங்கைக்கு எவ்வித நன்மையும் செய்யவில்லை. தனது நலனுக்காவே இலங்கையைப் பயன்படுத்தி வருகின்றது. மஹிந்தவிற்கு சீனா நண்பர் என்பதால் கோட்டபாயவின் சட்டத்தரணியான அமைச்சர் அலிசப்ரி சீனாவை நண்பர் என்று கூறலாம்.
சீனா இலங்கையின் நட்பு நாடாக இருந்தால் ஏன் சர்வதேச நாணய நிதிய மறுசீரமைப்புத் திட்டத்திற்கு உடன்படவில்லை” எனவும் கேள்வி எழுப்பினார்.
