2005 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை பதிவு செய்த திரைப்படம் சந்திரமுகி.
இந்நிலையில், தற்போது சந்திரமுகி – 2 உருவாகி வருகின்றது. இதில் கதா நாயகனாக ராகவ லோரன்ஸ் நடித்து வருகின்றார்.
அத்துடன், வைகப்புயல் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் இடம்பெறும் ஃபிளாஷ் பேக் காட்சியில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.
இப்படத்தின் கதையை எதேச்சியாக கேட்ட நடிகை கங்கனா நான் கண்டிப்பாக இப்படத்தில் அதுவும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்று இயக்குனர் பி. வாசுவிடம் கேட்டுக் நடித்துள்ளதாக சினிமா செய்திகள் தெரிவிக்கின்றன.
