ண
இந்தியா மத்தியப் பிரதேசத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாதயாத்திரையால் எனது பொறுமை கணிசமாக அதிகரித்து விட்டது.
இரண்டாவது 8 மணி நேரமானாலும் நான் எரிச்சல் அடைவது இல்லை. முன்பெல்லாம் 2 மணி நேரத்தில் எரிச்சல் அடைந்து விடுவேன். யாராவது தள்ளினாலும், இழுத்தாலும் என்னை பாதிப்பது இல்லை.
மூன்றாவது, மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்கும் திறன் அதிகரித்துள்ளது. யாராவது என்னிடம் ஏதேனும் சொல்ல வந்தால், நன்றாக கேட்கிறேன். இவையெல்லாம் எனக்கு பயனுள்ளதாக அமையும் என்று நினைக்கிறேன். நான் பாதயாத்திரையை தொடங்கியபோது, ஏற்கனவே குணமாகிவிட்ட ஒரு காயத்தால், முழங்காலில் வேதனை ஏற்பட்டது. அந்த நிலைமையில், என்னால் நடக்க முடியுமோ, முடியாதோ என்ற அச்சம் உருவானது. ஆனால், அந்த அச்சத்தை சமாளித்தேன் என்றார்.
