நல்லூர் பிரதேசசபையின் 2023 ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் இன்று (30) தவிசாளர் ப.மயூரனால் சமர்ப்பிக்கப்பட்டது.
இலங்கை தமிழரசு கட்சியின் 3 உறுப்பினர்கள், ஈ.பி.டி.பியின் 4 உறுப்பினர்கள், மணிவண்ணன் தரப்பின் 3 உறுப்பினர்கள், சுயேச்சை குழுவின் 2 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஶ்ரீ லங்கா சுகந்திரக்கட்சியின் தலா ஒரு உறுப்பினர் வீதம் மொத்தம் 15 உறுப்பினர்கள் வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்கள் வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
