வடமாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரசாங்க உயர்மட்டத்தில் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாகவும், அதற்கு முன்னதாக படிப்படியாக மாகாண சபைகளின் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடமாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு அரச உயர்மட்டத்தில் தீவிர ஆலோசணையை ஜனாதிபதி ரணில் நடத்தி வருவதாகவும் அவ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
