கொழும்பு பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ள நிலையில், தாயாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
கொழும்பில் தங்கியிருந்து நண்பனுடன் கல்வி பயின்று வரும் 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் இரண்டு மாதங்களாக குடும்பத்தினருடன் தொடர்பு இன்றி இருந்துள்ளார்.
பல தடவைகள் குடும்பத்தினரால் தொலைபேசி அழைப்புக்கள் எடுக்கப்பட்ட போதும் பதில் அளிப்பதில்லை.
இந்நிலையில் கடந்தவாரம் இளைஞனின் தாயார் கொழும்புக்கு சென்றுள்ளார்.
தாயார் வந்துள்ளதையும் அறிந்து கொள்ள முடியாத குறித்த இளைஞன் அறையின் மூலையில் இருந்துள்ளார். குறித்த இளைஞனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இளைஞன் போதைப் பொருளுக்கு அடிமையானமை தெரிய வந்துள்ளது.
காதல் தோல்வியாலேயே குறித்த இளைஞன் போதைக்கு அடிமையாகியுள்ளதாக அவருடைய நண்பர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த இளைஞனின் தாயர் மகனின் நிலையை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் உயிரை மாய்க்க முயற்சி செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
