சென்னை ராஜா எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில், அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு ஆரம்ப விழா நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் கலந்துகொண்டு, கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஜானகி – எம்.ஜி.ஆர் சிறப்பு மலர், ஆவணப்பட குறுந்தகடு, பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நூல் ஆகியவற்றை வெளியிட்டு வைத்தார்.
“என் மீது எம்.ஜி.ஆர் அதிக பாசம் கொண்டவர். அ.தி.முகவை விட தி.மு.கவில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு அதிகமானது. தேசிய இயக்கத்தில் இருந்த எம்.ஜி.ஆரை தி.மு.கவிற்கு அழைத்து வந்தவர் கருணாநிதி. ஜானகி அம்மையார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்த கல்லூரிக்கு அனுமதி வழங்கியவர் கருணாநிதி. இன்று நூற்றாண்டு விழா காணும் இந்த கல்லூரியை தொடங்கிய ஜானகி அம்மையார், தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கியவர்.
பல கலைகளை முறையாக கற்றவர். கொடை உள்ளம் கொண்டவர். அவரது முதல் படத்திற்கு கதை வசனம் எழுதியது கலைஞர் கருணாநிதி. அவரது கடைசி படத்திற்கும் கதை வசனம் எழுதியது கலைஞர் கருணாநிதிதான். ஜானகி மட்டும்தான் எனது வாரிசு என உயில் எழுதி வைத்தவர் எம்.ஜிஆர்.” நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்ராலின் தெரிவித்தார்.
