அமெரிக்காவின் மேற்கே பசிபிக் பெருங்கடலுக்கு அண்மையில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மவுனா லோவா எரிமைலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
பெரிய அளவிலான நிலநடுக்கங்களைத் தொடர்ந்து எரிமலை வெடிப்பு தொடங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வெடிப்பைத் தொடர்ந்து எரிமலையில் இருந்து நெருப்பு குழம்பு வெளியேறி வருகிறது. எனினும் அது தற்போது எரிமலை வாயின் விளிம்புகளுக்கு உள்ளாக முடிந்திருக்கின்றன என்றும், எனவே அது குறித்து அச்சுறுத்தல் தற்போதைக்கு இல்லை என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இறுதியாக மவுனா லோவா எரிமலை கடைசியாக கடந்த 1984-ம் ஆண்டில் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
