யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளில் காலாவதியான பொருட்களை கடைகளில் வைத்திருந்த 12 உரிமையாளர்களுக்கு 3 லட்சத்து 5 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றம் விதித்தது.
யாழ்.நகர் பகுதியில் 6 பலசரக்கு கடைகள், குருநகர் பகுதியில் 5 பலசரக்கு கடைகள், வண்ணார்பண்ணையில் ஒரு கடை மொத்தமாக 12 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்குத் தொடரப்பட்டது.
குறித்த வழக்கு இன்று (30) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது 12 வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் 3 லட்சம் 5 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
