அண்மையில் வெளியாகிய க.பொ.சாதரண தரப் பரீட்சையில் 6000 க்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரு பாடத்திலும் சித்தியடையவில்லை. இதுக்கு யார் பொறுப்பு என கல்வி அமைச்சர் சுசில் பிரமேஜயந்த தெரிவித்தார்.
இன்று (01) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனைவரும் யாருடைய உரிமைகள் பற்றி பேசுகின்றனர். அதிபர், ஆசிரியர்கள் சம்பள முரண்பாடுகள் பற்றி பேசுகின்றனர். 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் க.பொ.சா.தரப் பரீட்சையில் சித்தியடையவில்லை.
இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார்? பொறுப்புக்கூற எவரும் இல்லை – என்றார்.
