2023 ஆம் ஆண்டு இரு கட்டங்களாக மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
தை மற்றும் ஆனி மாதங்களில் இரண்டு கட்டங்களாக மின்சார கட்டண அதிகரிப்பு மேற்க்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
