சீனாவில் 1993 முதல் 2003 ஆம் ஆண்டு வரை அந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த ஜியாங் ஜெமின் காலமானார்.
ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஜியாங் ஜெமின், ஷாங்காய் நகரில் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். இந்த சூழலில் சமீபகாலமாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் 96 வயதான ஜியாங் ஜெமின் நேற்றுக் காலமானதாக சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
