யாழ்ப்பாணம் செம்மணி நல்லூர் நுழைவாயிலுக்கு அருகில் 7 அடி உயரமான கருங்கற் சிவலிங்கம் சிவபூமி அறக்கட்டளையினரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் சிறிய சிவனின் சிலை ஒன்று வைக்கப்பட்டு வழிபட்டு வரப்பட்டது.
இந்நிலையில், குறித்த இடத்தில் சிவபூமி அறக்கட்டளையினரால் கருங்கற் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
