சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குளி புதிய குடியேற்றப்பகுதியில் இன்று (01) 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கஞ்சாவுடன் மதுவரி திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாவற்குளி புதிய குடியேற்றப் பகுதியில் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்று (01) சாவகச்சேரி பிரதேசசபை, சாவகச்சேரி பிரதேச செயலகம், மதுவரித் திணைக்களம், சாவகச்சேரி பொலிஸார், சாவகச்சேரி சுகாதார பிரிவினர் மற்றும் குறித்த பகுதியின் கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமூக அமைப்புக்கள் இணைந்து குறித்த பகுதியில் உள்ள வீடுகள் அனைத்திலும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே சந்தேகத்தின் அடிப்படையில், குறித்த இளைஞனை சோதனை செய்த போது இளைஞனிடம் கஞ்சாப் பொட்டலம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த இளைஞனை மதுவரித் திணைக்களத்தினர் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
