நாடளாவிய ரீதியில் இன்றுடன் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் இரண்டாம் தவணையின் கற்றல் நடவடிக்கைகள் இன்று நிறைவடைந்துள்ளது. மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 5 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் டிசம்பர் 23 ஆம் திகதி முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி வரை நத்தார் பண்டிகைக்காக பாடசாலை விடுமுறை வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனவரி 2 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு அதே மாதம் 20 ஆம் திகதி நிறைவடையும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
