அரியாலை – தபால்கட்டைச் சந்திக்கு அண்மையில் உள்ள புகையிரதக் கடவையில் புகையிரதத்துடன் மினி வான் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ் கொடூர விபத்து சற்று முன்னர் (01) இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்துடன் வான் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தறபோது குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது. குறித்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் இணைக்கப்படும்.
