யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவர் இவ்வருடம் எச்.ஐ.வி தொற்று நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வடமாகாண ரீதியில் நான்கு பேர் எச்.ஐ.வி தொற்று நோயினால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளபட்டு வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை தொற்று தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் றெகான் மற்றும் வவுனியா பொது மருத்துவமனையின் பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரியந்த பட்டகலு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் காணப்பட்ட இருவரும் 30 வயதிற்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
