முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் காணியினை துப்பரவு செய்த போது மனித எச்சங்கள், விடுதலைப் புலிகளின் சயனைட் மற்றும் துப்பாக்கி ரவ்வைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு – உடையார் கட்டு குரவில் கிராமத்தில் கடந்த 20 ஆம் திகதி தனியார் காணியினை துப்பரவு செய்த போது மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.
இதனையடுத்து, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தால் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றின் உத்தரவின் பேரில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் நேற்று (30) மீண்டும் தோண்டப்பட்டது.
இதன்போது 3 வகையான மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி ரவ்வைகள், உடைகள் மற்றும் விடுதலைப்புலிகளின் சயனட் இலக்கத்தகடு என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
