2023 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புளிகள் இன்று (01) மாலை அல்லது நாளை (02) காலை வெளியாகும் என உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சு தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் 44 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்குள் உள்வாங்கப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
