மூன்று கட்சிகளில் இருந்து 70 பேர் ஐக்கிய தேசிய கட்சியில் புதிதாக இணைய உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட மூன்று கட்சிகளில் இருந்தே 70 பேர் வரையில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
