தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் ஒரு கிலோவின் விலை 200 தொடக்கம் 300 ரூபாவாக இருந்த நிலையில், இன்று (02) ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 150 முதல் 170 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
இந்நிலையில், உள்ளூர் சிவப்பு வெங்காயத்தின் மொத்த விலை 340 ரூபாவில் இருந்து 500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
