மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் 26வது ஸ்தாபகர் தினம் எதிர்வரும் 05.12.2022 (திங்கட்கிழமை) அன்று இடம்பெறவுள்ளது.
சனசமூக நிலையத் தலைவர் க.திவாகர் தலைமையில் பி.ப 3.30 மணியளவில், சனசமூக கலையரங்கில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு, பிரதம விருந்தினராக சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் க.வாமதேவன் கலந்து சிறப்பிக்க உள்ளார்.
அத்துடன், சிறப்பு விருந்தினர்களாக இலங்கை ரூபாஹினி கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் சி.வன்னியகுலம், அபிவிருத்தி உத்தியோகத்தர் பு.அருள்நேசன் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
கெளரவ விருந்தினர்களாக கைதடி மக்கள் நலன் பேணும் நட்புறவு கழகத்தலைவர் சி.நிஷாகரன், பருத்தித்துறை சிங்கர் காட்சியறை முகாமையாளர் க.சிவகரன் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
நிகழ்வுகள் ஆரம்ப நிகழ்வுகளோடு ஆரம்பமாகும். ஸ்தாபகரின் திருவுருவப் படத்திற்கு அவரின் மனைவியால் மலர் மாலை அணிவிக்கப்படும்.
நிகழ்வுகளின் தொடர்ச்சியாக ஸ்தாபகர் நினைவுப் பேருரையை வலிகாமம் கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் சி.மதியழகன் நிகழ்த்துவார்.
தொடர்ந்து மாணவர்களில் கலை நிகழ்வுகள் இடம்பெறும். விசேட நிகழ்வாக வதிரி மெல்லிசை குழு வழங்கும் இன்னிசை காணங்கள் இடம்பெறும்.
