நாட்டில் எரிபொருட்களின் விலைகளை 100 ரூபாவால் குறைக்க முடியும் என பெற்றோலியக் கூட்டுத்தாபத்தின் பணியாளர்கள் சங்க செயலாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருட்களின் விலை கணிசமான அளவு குறைவடைந்துள்ளது. நாட்டில் உள்ள எரிபொருள் சூத்திரத்திற்கு அமைய எரிபொருட்களின் விலையை 100 ரூபாவால் குறைக்க முடியும்.
ஆனால், அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளை குறைக்காமல் உள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபண பணியாளர்கள் சங்க செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
