யாழ்ப்பாணம் – பலாலி சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் மீண்டும் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியா அலியன்ஸ் எயர் விமான சேவை நிறுவனத்தால் மீண்டும் யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இவ்விமான சேவை வாரத்தில், திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இடம்பெறவுள்ளன.
