நாட்டில் மதுபானக்கடைகள், ஹோட்டல்கள் மற்றும் கடைகள் 24 மணிநேரமும் திறந்திருக்க வேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் இன்று (02) தெரிவித்தார்.
மதுபானக்கடைகள், ஹோட்டல்கள் இரவு 10.30 மணியுடன் மூடப்பட்டால் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியாது. எங்களிடம் இரவு பொருளாதாரம் இல்லையென்றால், சுற்றுலாப் பயணிகளுக்கு பணம் செலவழிக்க முடியாது என்று மேலும் தெரிவித்தார்.
