மனைவியுடன் முரண்பட்டுக் கொண்ட கணவன் மாமியாரின் வீட்டின் மீது கைக்குண்டு வீச முயற்சித்த நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் பதிவாகியுள்ளது. மனைவியும், கணவரும் அடிக்கடி முரண்பட்டுவரும் நிலையில், நேற்று முன்தினம் கணவனுடன் முரண்பட்டுக் கொண்டு மனைவி தாயின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், ஆத்திரமடைந்த கணவன் மாமியாரின் வீட்டுக்கு முன்னால் நின்று கைக்குண்டு வீசி எல்லோரையும் கொலை செய்யப்போாதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில், மனைவியால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
