இந்தியா இந்தூரின் பலாசியா பகுதியில் காலையில் சேவல் கூவுவதால் தமக்கு தொந்தரவாக இருப்வதாக பொலிஸ் நிலையத்தில் ஒருவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அலோக் மோடி என்பவரே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். “எனது அயல் வீட்டில் சேவல் கோழிகள் தினமும் அதிகாலை தவறாது 5 மணிக்கெல்லாம் கூவுகிறது. இதனால் வேலை முடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கும் நிலையில் சேவல் கூவி தூக்கத்தைக் கலைத்து விடுகிறது. அது முற்றிலும் தமக்கு இடையூறாக இருக்கிறது என அவ் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவு எட்டப்படாவிட்டால் சேவல் கூவும் சிக்கலை தீர்க்க குற்றவியல் நடைமுறையைப் பின்பற்றுவோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
